தமிழகத்தில் நவம்பர் 25 முதல் மிக கனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை!

 

தமிழகத்தில் நவம்பர் 25 முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சென்னையை சுற்றி உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நவம்பர் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்றும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் அதீத கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது 

rain

இதனால் தமிழகத்திற்கு நவம்பர் 25 ஆம் தேதி  ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

நவம்பர் 25 முதல் சென்னையிலும் நல்ல மழை பெய்யும் என்றும் இந்திய பெருங்கடல் மற்றும் வங்க கடலில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web