தமிழகத்தில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 
rain

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி விட்ட காரணத்தினாலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுவையில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும் திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web