குமரி மாவட்டத்தில் கனமழை: அணைகள் திறந்துவிடப்பட்டதால் பரபரப்பு!

 
rain

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று 3வது நாளாகவும் கனமழை பெய்து உள்ளதால் அங்கு உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி சாலைகளில் வெள்ளக்காடாக காட்சி அளித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்று பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள அணைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குமரி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இதனையடுத்து தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதத்துக்கு மீட்புப் பணிகள் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் ஒரு சில நாட்கள் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அம்மாவட்டத்தில் உள்ளவர்கள் கடும் சிக்கலில் உள்ளனர்.

From around the web