16 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 
rain

தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் சில தகவல்களை தற்போது பார்ப்போம்.

ஜூலை 17 இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு

ஜூலை 18 நாளை தென்காசி, திண்டுக்கல், சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும்,  ஜூலை 19ஆம் தேதி கோவை, தேனி, நீலகிரி, சேலம், திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தர்மபுரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய பகுதிகளீல் மிதமான மழை வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web