11 மாவட்டங்களில் கொட்டப்போகுதி கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 
rain

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்று 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடியகனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மழை பெய்யும் என்று கூறப்பட்ட 11 மாவட்டங்கள் பின்வருமாறு: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web