அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

 
rain

நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் பகுதிகள் குறித்த அறிவிப்பை சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்:

ஜூன் 25:  தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு 

ஜூன் 26: தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு 

ஜூன்27:  தென் கடலோர மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு 

ஜூன் 28: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு 

மேலும் வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் மற்றும் மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

From around the web