இன்று 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 
rain

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இன்று 16 மாவட்டங்களிலும் நாளை 9 மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் பணி இன்று மழை பெறும் மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர்

நாளை மழை பெறும் மாவட்டங்கள் பின்வருமாறு: திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, கரூர், ஈரோடு

From around the web