கனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை!

 
rain

தமிழகத்தில் கனமழை குறித்த எச்சரிக்கையை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மற்றும் விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஜூன் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் உள் மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web