5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

 
rain

தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் 5 மாவட்டங்களுக்கு கனமழை குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

தமிழகத்தில் கோவை நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சற்றுமுன் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து இதன் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் திண்டுக்கல், ஈரோடு, நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவித்துள்ளது 

மேலும் திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, சேலம், ராணிப்பேட்டை, திருப்பூர், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் சுமாரான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

ஜூலை 10 முதல் 12 ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் மலையேற்றத்தை தவிர்க்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

From around the web