5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

 
rain

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் மேலும் மேற்கு தொடர்ச்சி மலை, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 9ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web