அடுத்த 5 நாட்களுக்கு கொட்ட போகுது கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 
rain

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நிறைந்து விட்டதை அடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இந்த நிலையில் மேலும் மழை நீடிக்கும் என அவ்வப்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மற்றும் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக மக்கள் மீண்டும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web