இன்று 9 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

 
rain

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்,சி தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை  ஆகிய 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

மேலும் வங்கக் கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்வது பாதுகாப்பானது அல்ல என்றும் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி வருகிறது அறிவுறுத்தி உள்ளது

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

From around the web