ரூ.10 கோடி அபராதத்தொகையை செலுத்திவிட்டாரா சசிகலா? வழக்கறிஞர் விளக்கம்!

 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் அவர் இன்னும் ஒரு சில மாதங்களில் அவர் விடுதலை ஆகிவிடுவார் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையாக ரூபாய் 10 கோடியை அவர் செலுத்தி விட்டார் என்ற தகவல் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் 

sasikala

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ.10 கோடியை இன்னும் செலுத்தவில்லை என்றும் ஆனால் செலுத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் சிறைத் துறை அதிகாரிகளின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார் 

இந்த நிலையில் இன்று ரூபாய் 10 கோடி அபராதத் தொகை செலுத்த வாய்ப்பிருப்பதாகவும் சசிகலாவின் சிறை தண்டனை விரைவில் முடிவடைய உள்ள நிலையில் இந்த அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே அவர் விடுதலையாக முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

எனவே இன்று அவர் காசோலை மூலம் ரூபாய் 10 கோடி செலுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web