எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார்: ரஜினியை உசுப்பேற்றிவிடும் எச்.ராஜா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பெரியார் குறித்து அவர் கூறிய கருத்தும், முரசொலி குறித்து கூறிய கருத்தும் இன்னும் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ரஜினி அவதூறாக பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினியின் துக்ளக் விழா பேச்சு குறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்
 
எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார்: ரஜினியை உசுப்பேற்றிவிடும் எச்.ராஜா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் விழாவில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பெரியார் குறித்து அவர் கூறிய கருத்தும், முரசொலி குறித்து கூறிய கருத்தும் இன்னும் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ரஜினி அவதூறாக பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினியின் துக்ளக் விழா பேச்சு குறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் எதையும் தவறாக பேசவில்லை என்றும் அவரை யாராவது மிரட்ட நினைத்தால் எந்த சலசலப்பும் அவர் அஞ்ச மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்

ரஜினி தன் மீதான விமர்சனத்துக்கு இன்னும் பதில் கூறாத நிலையில் ரஜினி தரப்பாக எச் ராஜா பதில் கூறி அவரை உசுப்பேற்றி உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web