பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

 
பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஒன்றின் மூலம் பிளஸ் டூ தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது 

பிளஸ் டூ தேர்வில் செய்முறை தேர்வுகளுக்கான நடத்தை விதிமுறைகளை தமிழக அரசு தேர்வுத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்த தேர்வு நடைபெறும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது 

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வில் தேர்வுத்துறை அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தற்போது பார்ப்போம். இயற்பியல், வேதியல், கணிப்பொறி இயல், தாவரவியல் உள்ளிட்ட மாணவர்களுக்கு ஏப்ரல் 18 முதல் செய்முறை தேர்வு நடைபெறும் 

practical exam

செய்முறை தேர்வுக்கு முன்னரும் பின்னரும் அறையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

ஆய்வு அறையில் தீ பிடிக்க கூடிய பொருட்களில் சனிடைசர் உள்ளிட்ட எந்த பொருட்களை வைக்கக் கூடாது

மேலும் வேதியல் தேர்வின்போது மாணவர்கள் பிப்பெட் என்னும் உபகரணத்தை பயன்படுத்த வேண்டாம்

தாவரவியல் மற்றும் உயிரியல் செய்முறை தேர்வில் மைக்ராஸ்கோப் பயன்படுத்த வேண்டாம் 
செய்முறை தேர்வின்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும்

செய்முறை தேர்வுக்கு முன்பும் பின்பும் கைகளை சோப்புப் போட்டு மாணவர்கள் நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது

From around the web