சிக்கலில் ஜி.பி.முத்து, ரவுடி பேபி: நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

 
gp muthu

யூட்யூபில் கடந்த சில வருடங்களாக எல்லை மீறி சிலர் வீடியோ பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் யூடியூப் மதன் இதன் காரணமாக கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து இதே போல ஆபாசமாக வீடியோக்களை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக அவல சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்

அந்த வகையில் ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா உள்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் சமூக வலைதளப் பக்கங்கள் மூடப்பட வேண்டும் என மக்கள் அதிகார இயக்கம் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது

ஆன்லைன் வகுப்புகாக இணையத்தை பயன்படுத்தும் மாணவ மாணவிகள் இதுபோன்ற வீடியோக்களை பார்க்க நேரிட்டால் மனதளவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனை அடுத்து ஜிபி முத்து உள்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதேபோன்று ஆபாசமாக யூடியூப்பில் பதிவு செய்பவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அவர்களுடைய யூடியூப் பக்கங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web