வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்காக தமிழக அரசின் அரசாணை!

 
employment


கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை தமிழக அரசு அளித்துள்ளது. இதற்கான அரசாணை ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்து அரசாணை ஒன்றில் கூறியிருப்பதாவது: 2017 முதல் 2019ஆம் ஆண்டு வரை புதுப்பிக்க விரும்புபவர்கள் அரசாணை வெளியிட்ட மூன்று மாதங்களுக்குள் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், இந்த சலுகை ஒரு நபருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்றும், மூன்று மாதங்களுக்கு பின்னர் புதுப்பிக்க கோரப்படும் கோரிக்கைகள் நிராகரிப்பு செய்யப்படும் என்றும் கூறியுள்ளது

அதேபோல் 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் புதுப்பிக்க தவறியவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையில் இது குறித்த தகவலை பதிவு செய்ய வேண்டும் என அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகம் தக்க அறிவுரை வழங்கி இருப்பதாகவும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர்கள் இதுகுறித்த அறிவிப்பை ஒவ்வொரு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் முன் வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

employment

employment

From around the web