பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு அரசின் வேண்டுகோள்!

 

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் என்பதும் மனித இனமே பெரும் அச்சத்தில் உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் திடீரென பிரிட்டனில் இரண்டாம் அலையான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது 

corona

இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து வந்தவர் தமிழகம் வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இந்த அறிவுறுத்தலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனிலிருந்து வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் இதற்குரிய சந்தேகங்களுக்கு இலவச தொலைபேசி எண் 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

From around the web