சென்னையில் நல்ல மழை: 10 மணி வரை தொடரும் என அறிவிப்பு

 

சென்னையில் கடந்த சில மணி நேரங்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சென்னையில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு, தேனாம்பேட்டை, வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

rain

இந்த நிலையில் அத்தியாவசியமான தேவை இருந்தால் மட்டும் வெளியில் செல்லவும் என்றும் மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களில் கவனமாக செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 

அதுமட்டுமின்றி வேலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி, திருவண்ணாமலை, காரைக்கால் போன்ற பகுதிகளிலும் இன்று மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி வரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அலுவலகம் மற்றும் கல்லூரி செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web