மூன்று நாள் இறங்கிய தங்கம் ஒரே நாளில் ஏறியது: இன்றைய விலை என்ன?

 
gold

கடந்த மூன்று நாட்களாக சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று இறங்கிய நிலையில் இன்று ஒரே நாளில் கிராம் ஒன்றுக்கு 37 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்:

சென்னையில் இன்று  22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 37 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் விலை ரூபாய் 4443 என விற்பனை ஆகி வருகிறது. இதே தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.4406 என விற்பனையானது. சென்னையில் இன்று தங்கம் ஒரு சவரன் ரூபாய் 35544.00 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பதும், நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு 296 ரூபாய் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் இன்று சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4802 என்றும் 8 கிராம் ரூபாய் 38416 என்றும் விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் 74.10 ரூபாய் எனவும், வெள்ளி ஒரு கிலோ 74100.00 என்றும் விற்பனையாகி வருகிறது.

From around the web