தங்கம் விலை திடீர் உயர்வு: சவரன் ரூ.40 ஆயிரத்தை தொடும் என தகவல்

 
gold

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் பங்குசந்தை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பங்குச் சந்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பங்கு சந்தை உயரும் போதெல்லாம் தங்கம் விலை குறையும். ஆனால் தற்போது தங்கம் விலையும் அதிகரித்து கொண்டு வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏறியும் இறங்கியும் வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 400 உயர்ந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,595 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்திருத்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,652 என்ற விலையிலும், சவரன் ரூ.37,216 என்ற விலையிலும் விற்பனை ஆகிறது. அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.77.10 என்ற விலையில் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு இருப்பதாகவும் விரைவில் ரூ.40 ஆயிரத்தை தொடும் என்றும் கூறப்படுகிறது.

From around the web