சென்னையில் இன்று திடீரென உயர்ந்த தங்கத்தின் விலை

 
gold

கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் அதிகரித்து விற்பனையாகி வருவதால் நகை வாங்க முடிவு செய்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் இந்தியாவிலும் தங்கத்தின் விலை ஒரு சில நாட்கள் உயர்ந்தும், ஒரு சில நாட்கள் குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை சென்னையில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.

இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் அதிகரித்து 4,611 ரூபாய் என விற்பனையாகிறது. இதனால் தங்கம் ஒரு சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து ரூ.36,888 என விற்பனையாகிறது. அதேபோல் சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 4970 ரூபாய் என விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை நேற்றைய விட இன்று ஒரு கிராமுக்கு 20 பைசா அதிகரித்து 76.20 ரூபாய் என விற்பனையாகி வருகிறது என்பதும், ஒரு கிலோ வெள்ளி 76,200 ரூபாய்க்கு விற்பனையாகி  வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web