தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்றைய விலை என்ன?

 
gold

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.

நேற்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு நேற்று 4473.00 ரூபாய் என்ற விலையில் இருந்த நிலையில் இன்று சென்னையில் கிராம் ஒன்றுக்கு 17 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4490.00 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. 

அதே போல் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 35784.00 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று சவரன் ஒன்றிற்கு ரூபாய் 136 உயர்ந்து 35920.00 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூபாய் 4840.00 என்றும் 8 கிராம் ரூபாய் 38720.00 என்றும் விற்பனையாகி வருகிறது. அதே போல் சென்னையில் வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் 74.90 ரூபாய் என்றும் ஒரு கிலோ 74900.00 என்றும் விற்பனையாகிறது. 

From around the web