மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: சென்னையில் இன்றைய விலை

 
gold

சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் சென்னையிலும் தங்கம் விலை ஒருநாள் உயர்ந்தும், ஒருநாள் இறங்கியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு பத்து ரூபாய் உயர்ந்துள்ளது தங்க நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4515.00 என்றிருந்த நிலையில் இன்று 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் விலை ரூபாய் 4525.00 என விற்பனையாகி வருகிறது. இதேபோல் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 36120.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூபாய் 36200.00 என விற்பனையாகி வருகிறது. 

அதே போல் 24 கேரட் தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூபாய் 4885.00  எனவும் சவரன் விலை ரூபாய் 39080.00 எனவும் விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலை இன்று நேற்றை விட 40 காசுகள் கிராம் ஒன்றுக்கு உயர்ந்து ரூபாய் 74.10 என விற்பனையாகி வருகிறது என்பதும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 74100.00 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web