மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை: இன்றைய விலை என்ன?

 
gold

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இறங்கிக் கொண்டிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை திடீரென ஏறி வருவது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன என்பதை பார்ப்போம்.

சென்னையில் இன்று தங்கம் கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4485 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதனால் இன்று சவரன் ஒன்றிற்கு ரூபாய் 40 உயர்ந்து 35,880 என்ற விலையில் விற்பனையாகிறது
 
மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூபாய் 4844 என்றும் சவரன் விலை ரூபாய் 38752 என்றும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 74.90 ரூபாய் என்றும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.74900 என்றும் விற்பனையாகிறது. 

From around the web