திடீரென சரிந்த தங்கம் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

 
gold

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்த தங்கம் விலை இன்று திடீரென கிராம் ஒன்றுக்கு 19 ரூபாயும் சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து தங்கம் வாங்க பொதுமக்கள் தங்க நகை கடைகளில் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.19 ரூபாய் சரிந்து உள்ளதை அடுத்து ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 4506.00 எனவும், சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 152 ரூபாய் குறைந்தை அடுத்து ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 36048.00 எனவும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் சுத்தமான 24 காரட் தங்கம் விலை இன்று சென்னையில் ஒரு கிராம் 4866.00 எனவும், ஒரு சவரன் 338928.00 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 20 காசுகள் குறைந்து உள்ளதை அடுத்து வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.73.90 எனவும் ஒரு கிலோ விலை 73900.00 ரூபாய் எனவும் விற்பனையாகி வருகிறது

From around the web