தங்கம் விலை சென்னையில் இன்று திடீர் சரிவு!

 
gold

சர்வதேச அளவில் பொருளாதாரம் மீண்டு வருவதை அடுத்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்து உள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்துள்ளதால் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.4440 என விற்பனையாகி வருகிறது. இதனால் ஆபரண தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து சவரன் ஒன்றுக்கு ரூ.35,520  என விற்பனையாகிகிறது 

சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு 10 காசு குறைந்துள்ளதை அடுத்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10 என விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி ஒரு கிலோ ரூ.73,100 என விற்பனையாகி வருகிறது 

தங்க கடைகள் சென்னையில் திறக்கப்படாவிட்டாலும் ஆன்லைனில் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web