தங்கம் விலை இன்றும் சரிவு, சென்னையில் என்ன விலை?

 
gold

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் இருக்கும் நிலையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த சில நாட்கள் வரை தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே இருந்த நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சரிந்து வருகிறது.

இதனை அடுத்து இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன சென்னையில் இன்று மாலை தங்கத்தின் விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்

இன்று மாலை சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.4,597 என விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சவரன் ஒன்றுக்கு ரூ.8 ரூபாய் குறைந்து 36,776 ரூபாயாக என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4956 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் வெள்ளி விலை சென்னையில் கிராம் ஒன்றின் விலை 76.00 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 76,000 ஆயிரம் ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

From around the web