விநாயகர் சிலை வைக்க அனுமதி: அரசு அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

 
vinayagar

செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க மற்றும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது

இந்த அறிவிப்புக்கு பாஜக, இந்து முன்னணி உட்பட பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி உண்டு என அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார்

மேலும் விநாயகர் சிலைகளை கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வைத்து பக்தர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்

தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை என்ற நிலையில் அண்டை மாநிலமான புதுவையில் அனுமதி கிடைத்துள்ளது அம்மாநில பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web