விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு ஏற்பாடு!

 
omni buses

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் அரசு விடுமுறை என்பதால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து ஆயிரம் சிறப்பு பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

விநாயகர் சதுர்த்தியோடு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவார்கள். எனவே பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

அதன்படி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,250 பஸ்களோடு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,000 சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்க முடிவு செய்துள்ளோம்.

இன்று கூடுதலாக 100 பஸ்களும், நாளை (8-ந்தேதி) 300 பஸ்களும், 9-ந்தேதி 600 பஸ்களும் இயக்கப்படுகிறது. மேலும் பயணிகளின் தேவையை பொறுத்து கூடுதலாக பஸ்களை இயக்கவும் தயாராக இருக்கிறோம்.

அதேபோல விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வர வசதியாகவும் போதிய அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு போக்குவரத்து துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

From around the web