இன்று முழு ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள், என்னென்ன தளர்வுகள்?


​​​​​​​

 
இன்று முழு ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள், என்னென்ன தளர்வுகள்? ​​​​​​​

தமிழகத்தில் தினந்தோறும் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நேற்று சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இருந்தும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் எட்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த ஊரடங்கு உத்தரவின்போது, இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி இல்லை. 

lockdown

அதே போல் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி

பால் வினியோகம் தினசரி பத்திரிக்கை மருத்துவமனை மருத்துவ பரிசோதனை கூடங்கள் மருந்தகங்கள் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு அனுமதி விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு 

ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் எப்போதும்தங்கள் பணிகளைச் செய்யலாம். அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.  திருமணத்திற்கு 100 பேர்கள் மட்டும் அனுமதி என்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது 

இன்று முழு ஊரடங்கின் போது கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

From around the web