சென்னை உள்பட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கா? தமிழக அரசு ஆலோசனை!

 
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கா? தமிழக அரசு ஆலோசனை!

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று மட்டும் சுமார் 17,000 பேர்கள் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே. அதேபோல் சென்னையில் சுமார் 5000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடு தேவையா என்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். இன்றைய ஆலோசனைக்கு பின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்த பின் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 

corona

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் மிக அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பதை அடுத்து இந்த ஐந்து மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது 

ஏற்கனவே கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கால் ஏற்பட்ட வாழ்வாதாரத்தை தொலைத்து உள்ள பொதுமக்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு முழு ஊரடங்கு தாங்காது என்று அனைவரும் கருத்து கூறி வருகின்றனர்

From around the web