தமிழகத்தில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்!


 

 
தமிழகத்தில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்!

தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்றும் இந்த ஊரடங்கு ஏப்ரல் 20 முதல் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என்றும் இருப்பினும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்

* திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்

* ஞாயிறு அன்று திரையரங்கம், வணிக வளாகங்கள் செயல்படவும் அனுமதி இல்லை

* முழு ஊரடங்கு நாளில் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி

* ஞாயிறு அன்றும் திருமண நிகழ்ச்சியில் 100 பேர் வரை பங்கேற்கலாம்

* வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் 
தடை

* இரவு நேர ஊரடங்கின் போது பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைக்கு அனுமதி இல்லை

* அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி

* இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி

* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து

* பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை

* பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி

* அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அனைத்து நாட்களிலும் தடை

* உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை

From around the web