தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா? சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் செப்டம்பர் மாதம் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது இந்தியா முழுவதும் இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பிரிட்டனில் இருந்து திடீரென புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து ஒரு சில மாநிலங்களில் மீண்டும் இரவு நேர முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பிரிட்டனில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் ஒரு சிலருக்கு பரவியுள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது 

lockdown

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஏற்பட்டு விடுமோ என்றும் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமோ என்றும் மக்கள் மனதில் அச்சம் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் பேட்டியளித்துள்ளார். இந்தப் பேட்டியை அடுத்து தமிழக மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web