தமிழகம் முழுவதும் ஆரம்பம்: ஊரடங்கில் பெரும் தளர்வுகள்

 
lockdown

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், தேனீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் அனுமதியும், தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து அனுமதியும், தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கலாம் என்றும், தமிழகம் முழுவதும் அனைத்து துணி கடைகளும் செயல்பட அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா நிலையங்கள் ஆகியவை இயங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள், கல்லூரிகள், நீச்சல் குளங்கள், திரை அரங்குகள், பூங்காக்கள் மற்றும் திறக்க தடை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநிலங்களுக்கு இடையிலான அரசு போக்குவரத்து தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 8 மணி வரை தமிழகம் முழுவதும் இயங்கும் என்றும் திருமண நிகழ்வுகளில் 50 பேர்கள் இறுதிச்சடங்கில் 20 பேர்களும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நாளை முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web