1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ்: அரசாணை வெளியீடு

 
students

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் என தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்

இது இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை ஒன்றிய ’தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்கள் தேர்ச்சி விவரத்தை பதிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக்கூடாது என்றும் எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்ற கூடாது என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது 

மேலும் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை இணையதளம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

tn govt order

From around the web