தமிழகத்தில் ஜூலை 13 முதல் வகுப்புகள் ஆரம்பம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்திலும் ஜூலை 13 முதல்…. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் ஜூலை13 முதல் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டு வருவதாகவும் அம்மாநில அரசு அறிவித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் இருப்பினும் ஜூலை 31 வரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசின் அனைத்து
 
தமிழகத்தில் ஜூலை 13 முதல் வகுப்புகள் ஆரம்பம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்திலும் ஜூலை 13 முதல்…. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் ஜூலை13 முதல் பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டு வருவதாகவும் அம்மாநில அரசு அறிவித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இருப்பினும் ஜூலை 31 வரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசின் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஜூலை 13-ஆம் தேதிக்கு பின்னர் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம் ஆகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்

ஜூலை 13-ஆம் தேதிக்கு பின்னர் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பிக்கலாம் என்றும் இதுகுறித்த நடவடிக்கைகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த அறிவிப்பை அடுத்து இதுவரை தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஜூலை 13ம் தேதிக்கு பின்னர் அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பள்ளிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் இல்லாததால் அது வரை ஆன்லைனில் மாணவர்கள் வகுப்புகளை கவனித்து பாடங்களைப் படித்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

From around the web