தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை: அமைப்பும் கலைக்கப்பட்டது

தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைக்கப்படுவதாக தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் செல்போன் கடை வியாபாரிகளான தந்தை, மகன் ஆகிய இருவரும் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்து காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பிரன்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. சட்டத்துக்கு
 

தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை: அமைப்பும் கலைக்கப்பட்டது

தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைக்கப்படுவதாக தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் செல்போன் கடை வியாபாரிகளான தந்தை, மகன் ஆகிய இருவரும் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட ஐந்து காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பிரன்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. சட்டத்துக்கு புறம்பாக இந்த அமைப்பு செயல்பட்டதாகவும், எனவே தமிழகம் முழவதும் இந்த அமைப்பை கலைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் கோரிக்கைகள் எழுந்தன. மேலும் ஒருசில மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரிகள் ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினரை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட் ஆப் போலீஸ் அமைப்பை கலைப்பதாக தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அத்யில் தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு கலைக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

From around the web