மாணவர்களுக்கு இலவசம்: சென்னை பல்கலை அதிரடி அறிவிப்பு!

 
university

மாணவர்களுக்கு இலவச கல்வி என சென்னை பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு ஒன்று மாணவர்களை குஷிப்படுத்தி உள்ளது

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் இலவசமாக கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் இலவச கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்றோர், முதல் தலைமுறை பட்டதாரி ஆகியோர்களுக்கு இந்த இலவச கல்வி பயில்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூபாய் மூன்று இலட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தகுதி உள்ள மாணவர்கள் இலவச கல்வியில் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

From around the web