கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா: தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு

 

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது

data

இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு செய்தார். இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது

இந்த திட்டத்தை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து இன்று முதல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதனை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர். இந்த டேட்டாவை மாணவர்கள் ஆன்லைன் பாடங்களை கவனிக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

From around the web