செப்டம்பர் 1 முதல் இலவச பேருந்து: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

 
city bus

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 50 சதவீத மாணவர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கு வரலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாஸ் தேவையில்லை என்றும் பள்ளி கல்லூரி சீருடையில் மற்றும் அடையாள அட்டை இருந்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

From around the web