மாற்றுத்திறனாளிகளின் உதவியாளருக்கும் இலவச பேருந்து வசதி: அரசாணை வெளியீடு

 
bus

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளே பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டார் என்பதும், இந்த அறிவிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து சேவை என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது மாற்று திறனாளிகள் உடன் வரும் உதவியாளர் ஒருவருக்கும் இலவச பேருந்து சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் வரும் உதவியாளர் ஆகிய இருவருக்கும் இலவச பேருந்து பயணத்திற்கான டிக்கெட்டை நடத்துனர்கள் அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இலவச பேருந்து சலுகையை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி அவர்களுடன் வரும் உதவியாளர் ஒருவருக்கும் இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது

From around the web