சாந்தினி புகாரை அடுத்து முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

 

சசிகுமார் நடித்த நாடோடிகள் என்ற திரைப்படத்தில் சிறு கேரக்டரில் நடிக்க இருந்த நடிகை சாந்தினி சமீபத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் ஒன்றை கூறினார்

இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் தற்போது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அனைத்து மகளிர் காவல் துறையினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர் 

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி, அடித்து காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் அனுமதியில்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல், ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் விரைவில் இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்றும் தன்னை அடித்து கொடுமைப் படுத்தியதாகவும் மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை சாந்தினி குற்றம் சாட்டி இருந்தார் என்பதும், ஆனால் சாந்தினியின் குற்றச்சாட்டை மறுத்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சாந்தினி யார் என்று தனக்கு தெரியாது என்றும் அவரை நான் பார்த்ததே இல்லை என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web