கொரோனா பாதித்து மரணம் அடைந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ: அதிர்ச்சி தகவல்

 

திமுக முன்னாள் எம்எல்ஏ ஜிபி வெங்கிடு கொரோனா பாதித்து மரணம் அடைந்ததாக வெளிவந்துள்ள செய்தி திமுக தலைமை மற்றும் தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

கொரோனாவால் மரணம் அடைந்த முன்னாள் எம்எல்ஏ ஜிபி வெங்கிடு அவர்கள் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏவாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் கொரோனா உறுதியான ஜிபி வெங்கிடு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் அவர் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

கொரோனாவால் மரணம் அடைந்த முன்னாள் எம்எல்ஏ ஜிபி வெங்கிடு அவர்கள் மறைவிற்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web