முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் காலமானார்

 
முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் காலமானார்

முன்னாள் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் பாலமுருகன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் பாலமுருகன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார்.

o balamurugan

சிகிச்சை முடிவடைந்து நேற்று அவர் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு வந்ததாகவும் வீட்டிற்கு வந்த ஒரு சில மணி நேரங்களிலேயே அவர் காலமானதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பாலமுருகன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கும் ஓ பன்னீர்செல்வம் குடும்பத்தினருக்கும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

From around the web