திமுகவில் இணைந்துவிட்டு எடப்பாடியை முதல்வராக்குவேன் என்று கூறிய லட்சுமண்: பெரும் பரபரப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறும் தலைவர்கள் எண்ணிக்கையும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது சமீபத்தில் திமுகவில் இருந்து பலர் விலகிய நிலையில் தற்போது திமுகவுக்கு முன்னாள் அதிமுக எம்பி ஒருவர் வந்துள்ளார். இன்று அதிமுக முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளராகவும் இருந்தவரான லட்சுமணன் என்பவர் திமுகவில் இணைந்தார் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து லட்சுமணன் அவர்கள் திமுக உறுப்பினர் அட்டையை அவரிடமிருந்து
 

திமுகவில் இணைந்துவிட்டு எடப்பாடியை முதல்வராக்குவேன் என்று கூறிய லட்சுமண்: பெரும் பரபரப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறும் தலைவர்கள் எண்ணிக்கையும் அவ்வப்போது அதிகரித்து வருகிறது

சமீபத்தில் திமுகவில் இருந்து பலர் விலகிய நிலையில் தற்போது திமுகவுக்கு முன்னாள் அதிமுக எம்பி ஒருவர் வந்துள்ளார். இன்று அதிமுக முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளராகவும் இருந்தவரான லட்சுமணன் என்பவர் திமுகவில் இணைந்தார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து லட்சுமணன் அவர்கள் திமுக உறுப்பினர் அட்டையை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லட்சுமணன் பழக்க தோஷத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குவோம் என்று கூறி விட்டு அதன் பின் சுதாரித்து முக ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று கூறினாராம். லட்சுமணன் அவர்களின் இந்த ஜெர்க் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web