இந்தியாவிலேயே முதல்முறை: பி.பி.ஈ கிட் அணிந்து கொரொனா வார்டுக்கு சென்ற முதல்வர்

 
stalin

இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாநில முதல்வர் கொரோனா வார்டுக்கு பி.பி.ஈ கிட் அணிந்து ஆய்வு செய்தது தமிழகத்தில்தான் என்ற பெருமை ஏற்பட்டுள்ளது

இன்று கோவை சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கோவை எஸ் ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுக்கு பி.பி.ஈ கிட் அணிந்து சென்றார். கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் அவர் நலம் விசாரித்தார்

இந்தியாவில் இதற்கு முன் எந்த மாநிலத்திலும் கொரோனா வார்டுக்கு ஒரு முதல்வர் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை என்பதும் தமிழக முதல்வர்தான் இதனை முதன் முதலாக செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பி.பி.ஈ கிட் அணிந்து கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு முதல்வர் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web