இனி செல்போனில் பிக்சட் டெபாசிட்: அதிக வட்டி என தகவல்

 
google pay

இதுவரை வங்கியில் மட்டுமே பொதுமக்கள் டெபாசிட் செய்து வந்த நிலையில் இனிமேல் கூகுள் பே செயலி மூலமும் டெபாசிட் செய்யலாம் என்ற வசதி கிடைத்துள்ளது 
பணப்பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் செயல்களில் ஒன்று கூகுள் பே என்பதும் இது நம்பகத்தன்மையான செயலி என்பது மக்கள் மத்தியில் பெயரை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் வங்கியில் மட்டுமே இதுவரை பிக்சட் டெபாசிட் செய்து வந்த நிலையில் கூகுள் செயலிலும் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஈக்டிட்டி ஸ்மால் வங்கி என்ற வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள கூகுள் பே, இதன் மூலம் பொதுமக்கள் டெபாசிட் செய்யலாம் என்றும் இதற்கு வங்கியில் கிடைப்பதை விட அதிக வட்டி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஏராளமானோர் மூலம் கூகுள் பே செயலியில் பிக்சட் டெபாசிட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் கூகுள் பே மூலம் டெபாசிட் செய்வதற்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் அதில் உள்ள விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்தால் நாம் டெபாசிட் செய்யும் தொகை மெச்சூரிட்டி தினத்தன்று நமது வங்கிக் கணக்கிற்கு வட்டியுடன் திரும்ப வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web