முதுநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்!

 
college

தமிழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் அரசு கலை கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை சமீபத்தில் தொடங்கியது என்பதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று முதல் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என உயர் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்பட அனைத்து முதுநிலை படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் மாணவர்கள்  www.tngasapg.in, www.tngasapg.org ஆகிய இணையதளங்களில் சென்று ஆன்லைன் மூலம் தாங்கள் விரும்பும் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 58 மற்றும் பதிவு கட்டணம் ரூபாய் இரண்டு என 60 ரூபாய் கட்டணம் செலுத்தி மாணவர்கள் முதுநிலைப் படிப்பிற்கான விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் இன்று முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்று உயர் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது

From around the web