தீயாய் எழுந்து நின்றாய்..  காற்றாய் பயணமுற்றாய்: ஸ்டாலினுக்காக வைரமுத்து எழுதிய புகழ் மாலை!

 
தீயாய் எழுந்து நின்றாய்.. காற்றாய் பயணமுற்றாய்: ஸ்டாலினுக்காக வைரமுத்து எழுதிய புகழ் மாலை!


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து மாலை ஒன்றை கவிதை வடிவில் வடித்துள்ளார். அந்த கவிதையில் அவர் கூறியிருப்பதாவது:

vairamuthu

கலைஞர் திருமகனே! 
கண்ணுக்கு இனியவனே
நிலம் போல் பொறுமை கண்டாய்! 
நீர் போல் இனிமை கொண்டாய்!
தீயாய் எழுந்து நின்றாய்.. 
காற்றாய் பயணமுற்றாய்...
அதனால்தான்வான்போல் வளர்ந்து நிற்கிறாய்
உன்வெற்றி புறவழிப்பட்டது அல்ல... 
அறவழிப்பட்டது
அதனால்தான் நினைவிடத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து
கண்ணாடி கழற்றி கண் துடைக்கிறார் கலைஞர்
இனி இனமொழியை மீட்டெடுக்கும் உனது கரம்!
எழுதுகோலில் பாட்டெடுக்கும் எமது குலம்!!

இவ்வாறு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

From around the web